அழைப்புகளுக்கு கட்டணம் ஜியோ திடீர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
அழைப்புகளுக்கு கட்டணம் ஜியோ திடீர் அறிவிப்பு

புதுடெல்லி: அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 6 காசு வீதம் வசூலிக்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், கடந்த 2016 செப்டம்பரில் அழைப்பு, 4ஜி இணைய சேவைகளை அறிமுகம் செய்தது. துவக்கத்தில் அதிரடியாக முழுக்க முழுக்க இலவசமாகவே இந்த சேவைகளை அளித்தது. இதன்பிறகு தற்போது இணைய பயன்பாட்டுக்கு ஏற்ப பேக்கேஜ் நிர்ணயித்து வசூலித்து வருகிறது. இதில் குரல் அழைப்புகள் முற்றிலும் இலவசம்.   இந்நிலையில், முதல் முறையாக குரல் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 6 காசு வசூலிக்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது. நிறுவனங்களுக்கு இடையே பயன்பாட்டு கட்டணமாக (ஐயுசி) டிராய் நிமிடத்துக்கு 6 காசு வசூலிப்பதால், இந்த கட்டணம்  வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் இதற்கு இணையான  டேட்டாவை வாடிக்கையாளர்கள் கூடுதலாக பெறலாம் என ஜியோ கூறியுள்ளது. ஜியோவின் இந்த முடிவு, ஐயுசியை  குறைக்க நிர்ப்பந்தம் ஏற்படுத்துவதாக உள்ளது என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை