கடன் வாங்கியதில் இம்ரான் அரசு சாதனை

தினமலர்  தினமலர்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த ஓராண்டில் மட்டும் பாகிஸ்தான் அரசு அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 7.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை பிரதமரின் அலுவலகத்திற்கு பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி அனுப்பியுள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் வரை ஓராண்டு காலத்தில் மட்டும் அந்நாட்டு ரூபாய் மதிப்பின் படி வெளிநாட்டு மூலதனங்கள் வாயிலாக 2.8 லட்சம் கோடி ரூபாயும் உள்ளூர் மூலதனங்கள் வாயிலாக 4.7 லட்சம் கோடி ரூபாயும் அரசு கடனாக வாங்கியிருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.கடந்த ஆண்டு ஆகஸ்டில் 24 லட்சத்து 735 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பாகிஸ்தானின் ஒட்டுமொத்த கடன் அளவு இந்த ஆண்டு ஆகஸ்டில் 32 லட்சத்து 240 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

'முந்தைய எந்த அரசும் இது போன்று கடன் வாங்கியதில்லை; இது ஒரு சாதனை அளவு' என பாகிஸ்தான் ஊடகங்கள் விமர்சித்துள்ளன.பாகிஸ்தான் அரசு நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வரி வசூலாக ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் 96 ஆயிரம் கோடி ரூபாய் வசூலானதாக பாக். ஊடகங்கள் தெரிவித்துள்ளன.'சீன - பாக். உறவை உடைக்க முடியாது': சீனா சென்றுள்ள பாக். பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கை நேற்று சந்தித்தார். காஷ்மீர் விவகாரம் உட்பட பல பிரச்னைகள் பற்றி ஜின்பிங்கிடம் இம்ரான் விவாதித்தார்.

அப்போது இம்ரானிடம் ஜின்பிங் கூறியது பற்றி சீன அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது: சீனா - பாகிஸ்தான் உறவு பாறை போல பலமானது; யாராலும் உடைக்க முடியாது. சர்வதேச அளவில் எந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும் இந்த உறவு நிலையானது. இவ்வாறு இம்ரானிடம் ஜின்பிங் கூறியதாக சீன அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.'சீன அதிபரை போல் செயல்படுவேன்''ஊழலுக்கு எதிராக சீன அதிபர் ஜின்பிங் போல் செயல்படுவேன்' என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.சீனாவுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள இம்ரான் கான் பீஜிங்கில் நடந்த சர்வதேச வர்த்தக மேம்பாட்டுக்கான சீன கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தான் முதலீடுகளைப் பெறுவதில் ஊழல் பெரும் தடையாக உள்ளது. ஊழலுக்கு எதிராக சீன அதிபர் ஜின்பிங் எடுத்து வரும் கடும் நடவடிக்கைகள் என்னை கவர்ந்துள்ளன. நானும் அவர் போல் செயல்பட்டு பாகிஸ்தானில் 500க்கும் அதிகமான ஊழல்வாதிகளை சிறையில் அடைப்பேன். சீனாவின் வழியைப் பின்பற்றி பாகிஸ்தானிலும் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இம்ரான் பேசினார்.இம்ரான் - ஜின்பிங் சந்திப்பு பற்றி சீன அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது: சீனா - பாகிஸ்தான் உறவு பாறை போல பலமானது; யாராலும் உடைக்க முடியாது.

சர்வதேச அளவில் எந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும் இந்த உறவு நிலையானது. இவ்வாறு இம்ரானிடம் ஜின்பிங் கூறியதாக சீன அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.'சீன - பாக். உறவை உடைக்க முடியாது'சீனா சென்றுள்ள பாக். பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கை நேற்று சந்தித்தார். காஷ்மீர் விவகாரம் உட்பட பல பிரச்னைகள் பற்றி ஜின்பிங்கிடம் இம்ரான் விவாதித்தார்.அப்போது இம்ரானிடம் ஜின்பிங் கூறியது பற்றி சீன அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:சீனா - பாகிஸ்தான் உறவு பாறை போல பலமானது; யாராலும் உடைக்க முடியாது. சர்வதேச அளவில் எந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும் இந்த உறவு நிலையானது.இவ்வாறு இம்ரானிடம் ஜின்பிங் கூறியதாக சீன அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மூலக்கதை