2 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு அஸ்தானா மீதான விசாரணையை 2 மாதத்தில் முடிக்க அவகாசம்

தினகரன்  தினகரன்
2 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு அஸ்தானா மீதான விசாரணையை 2 மாதத்தில் முடிக்க அவகாசம்

புதுடெல்லி: சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றது தொடர்பான விசாரணையை முடிப்பதற்கு உயர் நீதிமன்றம் மேலும் 2 மாதம் காலக்கெடு வழங்கி உத்தரவிட்டுள்ளது. பண மோசடி மற்றும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியவர் தொழிலதிபர் மொயின் குரேஷி, இந்த முறைகேடு பற்றி விசாரணை நடத்தும் குழுவின் தலைவராக சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருந்தார். இவர் இந்த வழக்கை மூடி மறைப்பதற்காக 2 கோடி லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்நிலையில், இந்த விசாரணையை 10 வாரங்களில் முடிக்குமாறு சிபிஐ.க்கு கடந்த ஜனவரி 11ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கால அவகாசம் முடிந்த நிலையில் சிபிஐ மேலும் அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மேலும் 4 மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், மூன்றாவது முறையாக விசாரணையை முடிப்பதற்கான காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும்படி சிபிஐ சார்பில் உயர் நீதிமன்றத்தில் ேநற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி விபு பக்ரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்ேபாது, ‘அஸ்தனா மீதான குற்றச்சாட்டு விசாரணையை 2 மாதங்களில் முடிக்க வேண்டும். பிறகு, மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது,’ என சிபிஐ.க்கு நீதிபதி காட்டமாக உத்தரவிட்டார்.

மூலக்கதை