உலக போட்டித்திறன் இந்தியா 68வது இடம்

தினமலர்  தினமலர்
உலக போட்டித்திறன் இந்தியா 68வது இடம்

புது­டில்லி:உல­க­ளா­விய போட்­டித் திறன் குறி­யீட்­டில், இந்­தியா, 10 இடங்­கள் சரிந்து, 68 இடத்­திற்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. சிங்­கப்­பூர் முத­லி­டத்தை பிடித்­துள்­ளது.

பல நாடு­கள் கண்ட முன்­னேற்­றத்­தால், உல­க­ளா­விய போட்­டித்­தி­றன் குறி­யீட்­டில், இந்­தியா, 10 இடங்­கள் சரிந்து, 68 வது இடத்­துக்கு வந்­துள்­ளது. அதே­ச­ம­யம், சிங்­கப்­பூர், அமெ­ரிக்­காவை பின்­னுக்­குத் தள்ளி, உல­கின் பெரிய போட்டி பொரு­ளா­தா­ரமாக, முத­லி­டத்­துக்கு முன்­னே­றி­யுள்­ளது.ஜெனீ­வாவை தலை­மை­யி­ட­மாக கொண்ட, உலக பொரு­ளா­தார மன்­றம், உல­க­ளா­விய போட்­டித் திறன் குறி­யீட்டை வெளி­யிட்டு வரு­கிறது.

இது குறித்த அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்ள­தா­வது:பொரு­ளா­தார ஸ்தி­ரத்­தன்மை மற்­றும் சந்தை அளவு ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில், இந்­தியா உயர்ந்த இடத்­தில் உள்­ளது. அதே நேரத்­தில், நிதி துறை, ஒப்­பீட்­ட­ள­வில் நிலை­யா­ன­தாக இருந்த போதி­லும், அதன் வங்கி அமைப்­பின் திறன் பல­வீ­ன­மா­ன­தால், போட்­டித்­தி­றனை அது குறைத்­து­ விட்­டது.
இவ்­வாறு, அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை