அக்டோபர் 11, 12ல் சென்னையில் போக்குவரத்து மாற்றம்

தினகரன்  தினகரன்
அக்டோபர் 11, 12ல் சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னையில் முக்கிய சாலைகளில் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங் வருகையை முன்னிட்டு சென்னையில் அக்டோபர் 11, 12ல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னையில் ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, சர்தார் படேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை, இசிஆர் சாலையில் சில வகை வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அக்டோபர் 11, 12ம் தேதி காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகுரக வாகனங்கள், லாரிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மூலக்கதை