தமிழில் வாய்ப்பு தேடும் எவ்லின் சர்மா

தினமலர்  தினமலர்
தமிழில் வாய்ப்பு தேடும் எவ்லின் சர்மா

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க நடிகை எவ்லின் சர்மா. மாடலிங் துறையில் இருந்த இவர், ‛டேர்ன் லெப்ட்' என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் நடிகை ஆனார். அதன் பிறகு ‛பிரம் சிட்னி வித் லவ்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு வந்தார். தொடர்ந்து ‛‛இஷ்க், மெயின் தேரா ஹீரோ, பார்ட்டி நான் ஸ்டாப்'' உள்பட பல படங்களில் நடித்தார். சாஹோ படத்தின் மூலம் தமிழுக்கும் வந்தார்.

இப்போது எவ்லின் சர்மாவுக்கு தமிழ் படங்களில் நடிக்கும் ஆர்வம் வந்திருக்கிறது. இதற்காக தனது படங்களை, தயாரிப்பு நிறுவனங்களுக்கும், மீடியாக்களுக்கும் அனுப்பி வருகிறார். தமிழில் வாய்ப்பு தேட மேலாளரையும் நியமித்திருக்கிறார். மும்பையில் செட்டிலாகிவிட்ட இவர், பாலிவுட்டில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார்.

மூலக்கதை