சாண்டியை நேரில் வாழ்த்திய சிம்பு

தினமலர்  தினமலர்
சாண்டியை நேரில் வாழ்த்திய சிம்பு

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சாண்டியை, நடிகர் சிம்பு நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.

கடந்த ஞாயிறன்று பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்து விட்டது. இந்த முறை மலேசிய இசைக் கலைஞர் முகென் டைட்டிலை வென்றுள்ளார். இரண்டாவது இடத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிடித்தார்.

சினிமாவில் நடன இயக்குநராகப் பணி புரிந்த சாண்டிக்கு ஏற்கனவே ரசிகர்கள் ஏராளம். திரையுலகிலும் இவருக்கு நண்பர்கள் உள்ளனர். குறிப்பாக சிம்பு அவருக்கு நெருங்கிய நண்பர் ஆவார். எனவே தான் இந்த சீசனில் மஹத் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராகச் சென்ற போது, சிம்பு மிகவும் விசாரித்ததாக சாண்டியிடம் கூறினார்.

இந்நிலையில் தற்போது சாண்டியை நேரில் வாழ்த்தியுள்ளார் சிம்பு. இந்த சந்திப்பு சிம்பு வீட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சாண்டியுடன் தர்ஷன் மற்றும் மஹத் இருந்துள்ளனர்.

சாண்டியைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் அவரைத் தூக்கி சுற்றுகிறார் சிம்பு. பிறகு தர்ஷனிடம் கை குலுக்குகிறார். சாண்டிக்கு ஏதோ பரிசும் தருகிறார். இந்த வீடியோவை சிம்புவே தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இணையத்தில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

மூலக்கதை