நல்ல காதலுக்காக காத்திருக்கிறேன்: ஸ்ருதிஹாசன்

தினமலர்  தினமலர்
நல்ல காதலுக்காக காத்திருக்கிறேன்: ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன், லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் ஹோர்சேல் என்பவருடன் சில காலம் காதலில் இருந்தார். இருவரும், வெளிநாடுகளிலும் சுற்றித் திரிந்தனர். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கசப்பைத் தொடர்ந்து பிரிந்து விட்டனர்.

இந்நிலையில், தெலுங்கில் லட்சுமி மஞ்சு நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன் பங்கேற்றார். அவரிடத்தில் காதல் வாழ்க்கை குறித்து லட்சுமி மஞ்சு கேட்டார்.

அதற்கு பதிலளித்து ஸ்ருதி கூறியதாவது: நல்லவர்கள் சில நேரங்களில் நல்லவர்கள் போன்றும், சில நேரங்களில் மோசமானவர்கள் போன்றும் தெரிவார்கள். சில காலம் காதல் வாழ்க்கை இனிமையாகச் சென்றது. ஆனால், அதுவே கசப்பானதாக மாறியபின், உடனடியாக அந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்டு விட்டேன். காதல் முறிவால் எந்த வருத்தமும் இல்லை. இதை ஒரு அனுபவமாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். நல்லக் காதலுக்காக இப்போதும் ஏங்குகிறேன்; காத்திருக்கிறேன் என கூறி உள்ளார்.

மூலக்கதை