ஜெயிக்கப் பிறந்தவன்டா; முகினுக்கு அபிராமி வாழ்த்து

தினமலர்  தினமலர்
ஜெயிக்கப் பிறந்தவன்டா; முகினுக்கு அபிராமி வாழ்த்து

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்து, அதில் டைட்டில் வின்னராக முகின் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதில், முகின் ராவின் சக போட்டியாளராக கலந்து கொண்டதோடு, பிக்பாஸ் வீட்டில் அவரை உருகி உருகி காதலித்த நடிகை அபிராமி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகினுக்கு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ‛‛நீ ஜெயிக்கப் பிறந்தவன்டா... உன்னுடைய அன்பு என்றும் அனாதை இல்லை. நீ தனித்துவமானவன்; எப்போதும் நாம் நல்ல நண்பர்கள்'' என பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை