நம்ம வீட்டுப் பிள்ளை காட்சிகள் நீக்கம்: மீரா மிதுன் ஆதங்கம்

தினமலர்  தினமலர்
நம்ம வீட்டுப் பிள்ளை காட்சிகள் நீக்கம்: மீரா மிதுன் ஆதங்கம்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் பதினாரு போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் மீரா மிதுன். இவர், அழகிப் போட்டி நடத்துவதாகக் கூறி, பலரிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு அழகிப் போட்டி நடத்தாமல் ஏமாற்றியதாக பலரும் அவர் மீது புகார் கூறினர். இது தொடர்பாக, அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் போலீசில் உள்ளன. வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து ஜோ மைக்கேல் என்பவரை போட்டு தள்ள சொல்லி அவர் பேசிய ஆடியோ ஒன்று லீக்கானது. பின் பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் உடன் தான் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து வீடியோ பண்ண சொல்லி ஒருவரிடம் அவர் பேசிய ஆடியோ வெளியானது. இப்படி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வரும் மீரா, சிவகார்த்திகேயன் நடித்த, ‛நம்ம வீட்டு பிள்ளை' படத்திலும் நடித்தார். ஆனால் அவரின் காட்சிகளை படக்குழு நீக்கிவிட்டனர்.

இதுப்பற்றி டுவிட்டரில் கூறியுள்ள மீரா, ‛‛விஜய் டி.வி.,யில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கெடுத்ததால், நம்ம வீட்டுப் பிள்ளை பட காட்சிகளில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர். 10 நாள் படப்பிடிப்பில் பங்கேற்றேன். ஒரு பாடலுக்கு ஆடியிருந்தேன். எல்லாவற்றையும் நீக்கி உள்ளனர். இதற்கு பாண்டிராஜ், தயாரிப்பு நிறுவனம் பதில் சொல்ல வேண்டும். படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனும், விஜய் டி.வி., நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர் தான். திரைப்படங்கள் மற்றும் நடிகர்களின் தரத்தை மேம்படுத்த முதலில் கோலிவுட்டில் தொழில் முறை கலாச்சாரத்தை பெறுங்கள் என பதிவிட்டிருக்கிறார்.

மூலக்கதை