ஜிம்மில் இருக்கவே பிடிக்கும்: ஜான்வி கபூர்

தினமலர்  தினமலர்
ஜிம்மில் இருக்கவே பிடிக்கும்: ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். ‛தடக்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கவும் பேசி வருகின்றனர். ஜிம்மிற்கு சென்று உடற் பயிற்சியில் செய்வதில் ஆர்வம் உடையவர் ஜான்வி.

இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டி: நான், படப்பிடிப்பில் இருந்து, தற்போது ஓய்வு எடுத்து இருக்கிறேன். ஆனாலும், உடற்பயிற்சிக்கு ஓய்வு கொடுக்கவில்லை. ஆரோக்கியம் முக்கியம் என்று அம்மா ஸ்ரீதேவி அடிக்கடி சொல்வதுண்டு. எனது அம்மா உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அதனால்தான், அந்த அளவுக்கு உடம்பை அழகாகவும்; கட்டுக்கோப்பாகவும் வைத்து இருந்தார். எனது தாய், ஐம்பது வயதை தாண்டியவர் என்று யாரும் நம்ப முடியாது. காரணம் அவரது உடற்பயிற்சி.

அவருடைய மகளான எனக்கும், உடற்பயிற்சிகளில் ஆர்வம் இருக்கிறது. அதனால் தான், உடற்பயிற்சியில் எப்போதும் ஈடுபாடு காட்டுகிறேன். ஜிம்மில் இருக்கவே அதிகம் பிடிக்கிறது. தற்போது பெண் பைலட் குஞ்சன் சக்சேனா வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறேன். இது எனக்கு முக்கிய படமாக இருக்கும்.

இவ்வாறு ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

மூலக்கதை