சங்கர் மகாதேவனின் மகனை பாடகராக்கிய இமான்

தினமலர்  தினமலர்
சங்கர் மகாதேவனின் மகனை பாடகராக்கிய இமான்

பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனின் இளைய மகன் சிவம் மகாதேவன், சினிமா பாடகராகி இருக்கிறார். டி.இமான் இசையமைப்பில், அவர் சீறு என்ற படத்தில் ஒரு பாடல் பாடி அசத்தி இருக்கிறார்.

இயக்குநர் ரத்தின சிவா இயக்கத்தில், நடிகர் ஜீவா நடிக்கும் படம் சீறு. இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ரியா, நடிகர் நவ்தீப் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். காதல், ஆக்ஷன் கலந்து கமர்ஷியலாக தயாராகும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். அவர் பிரபல சினிமா பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனின் இளைய மகன் சிவம் மகாதேவனை, சீறு படத்தின் ஒரு பாடலை பாட வைத்திருக்கிறார். அந்தப் பாடலை கவிஞர் விவேகா எழுதி இருக்கிறார். பாடல் மிகப் பிரமாதமாக வந்திருப்பதாக, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசையமைப்பாளர் இமான் தெரிவித்திருக்கிறார்.

மூலக்கதை