3 ஆண்டுகளை கடந்த புலிமுருகன்: கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால்

தினமலர்  தினமலர்
3 ஆண்டுகளை கடந்த புலிமுருகன்: கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால்

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே அக்டோபர் மாதம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் புலிமுருகன் என்கிற படம் வெளியானது. மலையாள திரையுலகிலேயே முதல்முறையாக 100 கோடி வசூலித்து பிரமிப்பை ஏற்படுத்திய இந்த படம், ரஜினிக்கு ஒரு பாட்ஷா போல் மோகன்லாலின் திரையுலக பயணத்தில் ஒரு எவர்கிரீன் படமாக அமைந்துவிட்டது.

பிரபல இயக்குனர் வைசாக் இயக்கியிருந்த இந்த படத்தில் மோகன்லால் புலியுடன் மோதும் சண்டைக்காட்சிகள் ஆகட்டும், எதிரிகளுடன் மோதும் சண்டைக் காட்சிகள் ஆகட்டும் அவற்றிற்காகவே ரசிகர்கள் திரும்பவும் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வந்தனர். இனி இது போன்ற ஒரு படத்தில் மோகன்லாலே நினைத்தாலும் நடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.. அந்த அளவுக்கு உயிரிக்கொடுத்து ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார் மோகன்லால். அந்த ரிஸ்க் காரணமாக மற்ற மொழிகளில் உள்ளவர்கள் இதை ரீமேக் செய்ய தயங்கியதால் தெலுங்கு, தமிழ் உட்பட மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கேயும் வெற்றிபெற்றது.

இந்த நிலையில் தற்போது சித்திக் இயக்கத்தில் பிக் பிரதர் என்ற படத்தை நடித்து வரும் மோகன்லால், இந்த படம் மூன்று வருடங்களை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

மூலக்கதை