தபாங் 3ல் வில்லன் ஆனார் சுதீப்

தினமலர்  தினமலர்
தபாங் 3ல் வில்லன் ஆனார் சுதீப்

10 ஆண்டுகளுக்கு முன்பு சல்மான்கானின் வியாபார மார்க்கெட்டை இன்னும் சற்று உயரத்திற்கு கொண்டு சென்ற படம் தான் தபாங். யாரையும் சட்டை செய்யாத சுல்புல் பண்டே என்கிற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சல்மான்கான் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தார். அதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகத்தை சல்மான் கானை வைத்து பிரபுதேவா இயக்கி வருகிறார்.

ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து வான்ட்டட் என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்தவர்கள். இந்த நிலையில் தபாங்-3 படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் கிச்சா சுதீப்பை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த தகவலை நடிகர் சல்மான்கான், சுதீப்பின் போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மற்ற மொழிகளில் பிரபலமாக இருக்கும் ஹீரோக்கள் எல்லாம் வில்லனாகும் ட்ரெண்டில் தற்போது சுதீப்பும் இணைந்து விட்டார்.

மூலக்கதை