துல்கர் படத்தை இயக்குகிறார் ஜாய் தாமஸ்

தினமலர்  தினமலர்
துல்கர் படத்தை இயக்குகிறார் ஜாய் தாமஸ்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் சின்ன பட்ஜெட் படமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது ‛ஷட்டர்' என்கிற திரைப்படம். சண்டக்கோழி வில்லன் நடிகர் லால் நடித்த இந்த படத்தின் வெற்றியும், இந்த படத்தில் சொல்லப்பட்ட சமூக கருத்தும், இதனை ஆறு மொழிகளில் ரீமேக் செய்ய வைத்தது. இதையடுத்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜாய் தாமஸ், மம்முட்டி நடித்த ‛அங்கிள்' என்கிற படத்திற்கு கதையை மட்டும் எழுதினார். அந்தப் படமும் கேரள அரசின் விருதை பெற்றது.

இதற்கிடையே பிசியான நடிகராக மாறிப்போன ஜாய் தாமஸ், தமிழில் தேவி படத்தில் பிரபுதேவாவின் தந்தையாகவும் நடித்திருந்தார். இந்தநிலையில் நடிப்பை கொஞ்சம் ஒத்தி வைத்துவிட்டு மீண்டும் டைரக்ஷனில் இறங்கியிருக்கிறார் ஜாய் தாமஸ். துல்கர் சல்மானை வைத்து தனது புதிய படத்தை இயக்க இருக்கிறார். இவர் கதை எழுதிய ஷட்டர் மற்றும் அங்கிள் படங்கள் போல இந்த படமும் கலாச்சார காவலர்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மூலக்கதை