மம்முட்டிக்கு வில்லனாக மாறிய காமெடி நடிகர்

தினமலர்  தினமலர்
மம்முட்டிக்கு வில்லனாக மாறிய காமெடி நடிகர்

மலையாள திரையுலகில் வில்லன் நடிகர்களுக்கு தற்போது மிகப்பெரிய பஞ்சம் நிலவி வருவது உண்மை தான்.. அதனால் ஜெகபதிபாபு, விவேக் ஓபராய் என வேறு மொழிகளில் இருந்து வில்லன்களை இறக்குமதி செய்து நடிக்க வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மம்முட்டி தற்போது நடித்துவரும் ஷைலாக் என்கிற படத்தில் வில்லனாக பிரபல காமெடி நடிகர் கலாபவன் ஷாஜன் நடிக்கிறார். கலாபவன் ஷாஜனை பொறுத்தவரை ஏற்கனவே காமெடி தவிர, குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருபவர் தான். இருந்தாலும் ஒரு முழுநீள படத்தில் வில்லனாக நடிப்பது இதுதான் முதல்முறை..

சமீபத்தில்தான் கலாபவன் ஷாஜன் பிரித்விராஜ் நடித்த பிரதர்ஸ் டே என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார் என்பதும், தமிழில் 2.O படத்திலும் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

மூலக்கதை