22 ஆண்டுகளுக்குப் பின் பிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் மம்முட்டி

தினமலர்  தினமலர்
22 ஆண்டுகளுக்குப் பின் பிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் மம்முட்டி

மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களாக தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு. குடும்பப்பாங்கான படங்களை நெகிழவைக்கும் விதமாக படமாக்குவதில் வல்லவரான இவர் பெரும்பாலும் தனது 90% படங்களில் முன்னணி நடிகர்களையே வைத்து படம் இயக்கியுள்ளார்.

அந்தவகையில் மோகன்லால், மம்முட்டி என சீனியர்களும், துல்கர் சல்மான். பஹத் பாசில், நிவின்பாலி என ஜூனியர்களும் இவருடன் இணைந்து பணியாற்றியுள்ளனர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஹத் பாசிலை வைத்து ஞான் பிரகாசன் என்கிற படத்தை இயக்கினார் சத்யன் அந்திக்காடு.

அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தனது அடுத்த படத்தில் மம்முட்டியை வைத்து இயக்க உள்ளார். இதுவும் வழக்கமான ஒரு குடும்பப்பாங்கான படம் என்பதில் சந்தேகமில்லை. இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடந்த 1997க்கு முன்பு மம்முட்டியை வைத்து பல படங்களை இயக்கிய சத்யன் அந்திகாடு, கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் மம்முட்டி படத்தை இயக்குகிறார் என்பதுதான்..

மூலக்கதை