இறந்த ஆமையின் வயிற்றில் 104 பிளாஸ்டிக் துகள்கள்

தினமலர்  தினமலர்
இறந்த ஆமையின் வயிற்றில் 104 பிளாஸ்டிக் துகள்கள்

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா நகரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமையின் வயிற்றில் ஏறக்குறைய 104 பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இறந்த ஆமைக்கு அருகே, அதன் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட இந்த புகைப்படம், தற்போது உலகம் முழுவதும் பகிரப்பட்டுள்ளது. இயற்கை ஆர்வலர்கள் பலர் இதற்கு வேதனை தெரிவித்துள்ளனர். இது மிகவும் வேதனை அளித்து இருப்பதாகவும், மறுசுழற்சி செய்யும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும் எனவும் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.


மேலும் சிலர், நம்மால் கடல்வாழ் உயிரினங்களும், மற்ற உயிரினங்களும் எத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகின்றன என்பதை நினைவுபடுத்துவதற்காக இந்த புகைப்படத்தை வெளியிட்டதற்கு நன்றி எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் பிறகு பலரிடமும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இறந்த ஆமையின் வயிற்றில் இருந்து பலூன்கள், பாட்டில் லேபில்கள், உடைந்த பிளாஸ்டிக் துகள்கள் போன்றவை அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற இதுவரை ஏராளமான ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை