மின்கம்பத்தில் மோதி கார் கவிழ்ந்தது: வாலிபர் பலி: 3 பேர் படுகாயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மின்கம்பத்தில் மோதி கார் கவிழ்ந்தது: வாலிபர் பலி: 3 பேர் படுகாயம்

வாலாஜா: சாலையோர மின்கம்பத்தில் மோதிய கார் கவிழ்ந்ததில் மோதி வாலிபர் இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார்(24), சாய்கிருஷ்ணா (25), மோகன் (25) மற்றும் பாண்டியன்(24). இவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் ராணிப்பேட்டையில் இருந்து வாலாஜா அடுத்த டோல்கேட் பகுதிக்கு காரில் சென்றனர்.

சாய்கிருஷ்ணா காரை ஓட்டி சென்றார்.

வாலாஜாவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள மின்கம்பம் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 4 பேரும் படுகாயமடைந்தனர்.

அப்பகுதி மக்கள் வந்து காரில் இருந்தவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சுரேஷ்குமார் வழியிலேயே இறந்துவிட்டார்.

மோகன் உள்பட 3 பேருக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

.

மூலக்கதை