குஜிலியம்பாறை அருகே கனமழை: வீடு இடிந்து இளம்பெண் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
குஜிலியம்பாறை அருகே கனமழை: வீடு இடிந்து இளம்பெண் பலி

குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, கருங்கல் ஊராட்சி வேடபட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி கற்பகவள்ளி (27).

நேற்று முன்தினம் இரவு வேடபட்டியில் கனமழை பெய்தது. கற்பகவள்ளி வளர்த்து வந்த நாய், குட்டிகளுடன் மழையில் சிக்கி, எதிரே காலியாக இருந்த காலனி வீட்டில் கத்திக் கொண்டிருந்தது.

அவற்றை தனது வீட்டிற்கு எடுத்து வருவதற்காக கற்பகவள்ளி சென்றார். அப்போது காலனி வீட்டின் முன்பக்க சுவர் திடீரென இடிந்து கற்பகவள்ளி மீது விழுந்தது.

வீட்டின் மேற்கூரையும் சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இறந்த கற்பகவள்ளிக்கு அஸ்வின்குமார் (5), பிரேம்குமார் (3) என்ற மகன்கள் உள்ளனர்.

.

மூலக்கதை