மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்

சென்னை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது பீகாரில் பதிவு செய்யப்பட்டுள்ள தேச துரோக வழக்கை உச்ச நீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூக ஆர்வலர்கள், உள்ளிட்ட 49 முக்கிய பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர்.

இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா, முசாபர்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பல்வேறு அரசியல் கட்சி தலைவைர்கள் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி உள்ளனர்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாட்டின் குடிமகன் என்ற வகையில் எனது கோரிக்கை என்னவெனில், நமது உச்சநீதிமன்றம் ஜனநாயக முறைப்படி நீதியை நிலைநாட்ட,  பீகாரில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய  கேட்டுக்கொள் கிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார். மற்றொரு டுவிட்டில், ‘பிரதமர் ஒரு இணக்கமான இந்தியாவை நாடுகிறார்.

எனது சகாக்களில் 49 பேர் பிரதமரின் விருப்பத்திற்கு முரணாக தேசத் துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை