2015-16 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில்…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
201516 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில்…

2015-16 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவையில் பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சனிக்கிழமை காலை 11 மணிக்கு தாக்கல் செய்யவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முழுமையான முதல் பட்ஜெட்டான இதனை அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார். விலைவாசி உயர்வு காரணமாக நடுத்தர மக்களின் நலன் கருதி வருமான வரிவிலக்கு உச்சவரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் வரிவிலக்கை 50 ஆயிரம் ரூபாய் அருண் ஜெட்லி உயர்த்திய நிலையில், இந்த ஆண்டிலும் வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. அதோடு, மேலும் பல வரிச் சலுகைகள், விவசாயம் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கான பல்வேறு அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, ஏற்றுமதியை அதிகரிக்கவும், இறக்குமதியைக் குறைக்கவும் பட்ஜெட்டில் நடவடிக்கைகள் இருக்கும் என கூறப்படுகிறது. அனைத்து குடும்பங்களுக்கும் சொந்த வீடு, காப்பீடு மற்றும் மருத்துவ வசதி ஆகிய நோக்கத்தில் பல அறிவிப்புகளை அருண் ஜெட்லி வெளியிடுவார் என்றும் எதிர்பார்ப்பு உள்ளது. நேரடி மானிய திட்டத்தில் மேலும் பலவற்றை சேர்ப்பது, மானியங்களை படிப்படியாக குறைப்பது போன்றவற்றுக்கான நடவடிக்கைகளும் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

மூலக்கதை