சேவக் போல மயங்க் அகர்வால் * பாராட்டுகிறார் லட்சுமண் | அக்டோபர் 07, 2019

தினமலர்  தினமலர்
சேவக் போல மயங்க் அகர்வால் * பாராட்டுகிறார் லட்சுமண் | அக்டோபர் 07, 2019

புதுடில்லி: ‘‘மயங்க் அகர்வாலின் பேட்டிங் அணுகுமுறை, அவரது ‘ஹீரோ’ சேவக் போல துணிச்சலாக உள்ளது,’’ என லட்சுமண் தெரிவித்தார்.

இந்திய டெஸ்ட் அணி வீரர் மயங்க் அகர்வால் 28. கர்நாடகத்தை சேர்ந்த இவர், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான விசாகப்பட்டனம் டெஸ்டில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமண் கூறியது:

வழக்கமாக வீரர்கள் உள்ளூர், சர்வதேசம் என இரு வித கிரிக்கெட்டுக்கும் வித்தியாசம் காட்டுவர். ஆனால் மயங்க் அகர்வால் சிறப்பான வீரர். தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை, உள்ளூர் போட்டியை போல நினைத்து சாதாரணமாக விளையாடினார். எவ்வித வித்தியாசமும் காட்டாமல் அதே ‘ஸ்டைலில்’ எதிர்கொண்டார். 

போட்டியில் இவர் காட்டிய திறமை, மன வலிமையை பார்த்த போது வியப்பாக இருந்தது. அவரது ஆஸ்தான ‘ஹீரோ’ சேவக் போல துணிச்சலாக விளையாடினார். 

இவ்வாறு லட்சுமண் கூறினார்.

மூலக்கதை