அசார் மகன்–சானியா தங்கை திருமணம் | அக்டோபர் 07, 2019

தினமலர்  தினமலர்
அசார் மகன்–சானியா தங்கை திருமணம் | அக்டோபர் 07, 2019

 புதுடில்லி: முன்னாள் வீரர் அசார் மகன் அசாதுதீன், சானியா மிர்சா தங்கை ஆனம் மிர்சா திருமணம் செய்ய உள்ளனர்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 32. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை மணந்துள்ளார். இவரது தங்கை ஆனம் மிர்சா. இவருக்கும் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசார் மகன், முகமது அசாதுதீன் இடையே திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. 

இதை உறுதி செய்துள்ளார் சானியா மிர்சா. இதுகுறித்து சானியா வெளியிட்ட செய்தியில், ‘ஆனம் மிர்சா அழகானவரை திருமணம் செய்ய உள்ளார். முகமது அசார் மகன் அசாதுதீன் தான் இவர். தற்போது பாரிஸ் சென்றுள்ள ஆனம் மிர்சா நாடு திரும்பியதும், வரும் டிசம்பரில் திருமணம் நடக்கவுள்ளது. நாங்கள் எல்லோரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்,’’ என்றார்.

மூலக்கதை