‘நைட் வாட்ச்மேன்’ ரகானே: சச்சின் ருசிகரம் | அக்டோபர் 08, 2019

தினமலர்  தினமலர்
‘நைட் வாட்ச்மேன்’ ரகானே: சச்சின் ருசிகரம் | அக்டோபர் 08, 2019

மும்பை: பெண் குழந்தைக்கு தந்தையாகி உள்ள ரகானேவுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரகானே, 31. தற்போது, சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறார். இதற்கிடையே, இவரது மனைவி ராதிகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை தனது, ‘டுவிட்டரில்’ ரகானே தெரிவித்துள்ளார். தனது குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

சச்சின் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘  பெற்றோராக மாறும் தருணம் அற்புதமானது. இனி ‘நைட் வாட்ச்மேனாக’ ரகானே செயல்பட வேண்டும். இரவெல்லாம் கண்விழித்து ‘டயாப்பரை’ மாற்றும் பொறுப்பு உள்ளது,’ என, தெரிவித்துள்ளார்.

சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் உள்ளிட்ட வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை