பாக்., அம்பயர் மரணம் | அக்டோபர் 08, 2019

தினமலர்  தினமலர்
பாக்., அம்பயர் மரணம் | அக்டோபர் 08, 2019

 கராச்சி: உள்ளூர் போட்டியில் அம்பயராக செயல்பட்ட பாகிஸ்தானின் நசீம் ஷேக், மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

பாகிஸ்தானை சேர்ந்தவர் நசீம் ஷேக் 56, கிரிக்கெட் அம்பயர். கராச்சியில் உள்ள டி.எம்.சி., மைதானத்தில் நடந்த கிளப் அளவிலான கிரிக்கெட் தொடரில் அம்பயராக செயல்பட்டார். திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

மயங்கி கீழே சரிந்த இவரை ஆம்புலன்ஸ் உதவியால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இவர் வரும் வழியிலேயே மரணம் அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை