யார் கண்ணாடி... * தோனி மகள் வியப்பு | அக்டோபர் 08, 2019

தினமலர்  தினமலர்
யார் கண்ணாடி... * தோனி மகள் வியப்பு | அக்டோபர் 08, 2019

புதுடில்லி: இந்திய அணி வீரர் தோனி 38.  ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில், தனது மகள் ஜிவா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் என இருவரும் ஒரே மாதிரி கண்ணாடி அணிந்திருந்த போட்டோவை வெளியிட்டார்.

இதைப்பார்த்து தோனியிடம் வந்த ஜிவா, என்ன இவர் தனது கண்ணாடியை அணிந்துள்ளாரே என்பது போல முகபாவனை செய்தாராம். ஏதோ நினைவுக்கு வர, வேகமாக மாடிக்கு சென்று அதேபோன்று உள்ள தனது கண்ணாடியை கண்டு பிடித்துள்ளார். பின், அப்பாவிடம் ‘எனது கண்ணாடி என்னிடம் தான் உள்ளது,’ என்றாராம்.

இதுகுறித்து தோனி வெளியிட்ட செய்தியில்,‘தற்போதுள்ள குழந்தைகள் வித்தியாசமாக உள்ளனர். நான்கரை வயதில் இப்படி ஒரு கண்ணாடி உள்ளது என்பதே நமக்கு நினைவில் இருக்காது. அடுத்த முறை ரன்வீரை சந்திக்கும் போது, தன்னிடமும் இதே போல கண்ணாடி உள்ளது என ஜிவா கட்டாயம் தெரிவிப்பார்,’ என்றார்.

மூலக்கதை