புழல் ஒன்றிய திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
புழல் ஒன்றிய திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

புழல்: புழல்  ஒன்றிய திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் செங்குன்றம்  அடுத்த கிரான்ட் லைன்  ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  நடந்தது. ஒன்றிய செயலாளர்  ஜெகதீசன் தலைமை தாங்கினார்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன்,  ஒன்றிய இளைஞரணி  அமைப்பாளர் இனியவன் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் தெற்கு  மாவட்டம் திமுக செயலாளர் ஆவடி சாமு நாசர், திமுக இளைஞரணி  உறுப்பினர்  சேர்த்தல் முகாமை துவக்கி வைத்து  சிறப்புரையாற்றினார்.


இதேபோல் செங்குன்றம் பேரூர் திமுக இளைஞரணி உறுப்பினர்  சேர்க்கை முகாம், செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகில் நடந்தது.  

பேரூர் செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.   முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் துரைசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜெய் மதன்,   மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி துணைத்  தலைவர்கள் விப்ரநாராயணன், பாபு, திராவிடமணி  முன்னிலை  வகித்தனர்.

இதில், தெற்கு மாவட்ட செயலாளர்  ஆவடி சாமு நாசர், இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் முகாமை  துவக்கி வைத்தார்.

மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் திருமால்,  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நாராயணன் பிரசாத் மற்றும்  மாவட்ட பலர் கலந்து  கொண்டனர்.

.

மூலக்கதை