வண்டலூர் அருகே பரபரப்பு மர்ம காய்ச்சலுக்கு மாணவன் சாவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வண்டலூர் அருகே பரபரப்பு மர்ம காய்ச்சலுக்கு மாணவன் சாவு

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அடுத்த ஓட்டேரி விரிவு பகுதி, கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஹரிபாபு (40). கூலி தொழிலாளி.

இவரது மகன் ராஜேஷ்  (14). வண்டலூரில் உள்ள தனியார் மாற்றுத்திறனாளி பள்ளியில்  9ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 3ம் தேதி  ராஜேசுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.   இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சேர்த்தனர்.   பின்னர்,  மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   அங்கு சிகிச்சை பலனின்றி  மாணவன் நேற்று பரிதாபமாக இறந்தான்.    இதையடுத்து  மாணவனின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, டெங்கு காய்ச்சலால் மாணவன் இறந்துவிட்டதாக தகவல் பரவியதால்  பரபரப்பு நிலவியது.



இதுகுறித்து தகவல் அறிந்ததும்  நந்திவரம் ஆரம்ப சுகாதாரநிலைய  வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன்,  காட்டாங்கொளத்தூர் வட்டார  வளர்ச்சி அலுவலர் பாபு ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் வந்தனர். பின்னர், டெங்கு காய்ச்சல் பரவாமலிருக்க தடுப்பு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது.   இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டபோது,  “உயிரிழந்த மாணவனுக்கு டெங்கு பாதிப்பில்லை” என்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை