பைரவி படத்தில் தன்னை ஹீரோவாக்கிய தயாரிப்பாளர் கலைஞானத்துக்கு வீடு பரிசளித்தார் ரஜினிகாந்த்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பைரவி படத்தில் தன்னை ஹீரோவாக்கிய தயாரிப்பாளர் கலைஞானத்துக்கு வீடு பரிசளித்தார் ரஜினிகாந்த்

சென்னை: பைரவி படத்தின் மூலம் தன்னை ஹீரோவாக்கிய தயாரிப்பாளர் கலைஞானம்,  வாடகை வீட்டில் வசித்ததால் அவருக்கு ரஜினிகாந்த் வீடு  பரிசளித்துள்ளார். ரஜினிகாந்த் திரையுலகுக்கு வந்த ஆரம்ப கட்டத்தில் வில்லன் வேடங்களில் நடித்து வந்தார்.

அவரை பைரவி படம் மூலம் ஹீரோவாக நடிக்க  வைத்தார் தயாரிப்பாளர் கலைஞானம். கடின உழைப்பால் ரஜினி இன்றைக்கு சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார்.

சமீபத்தில் கலைஞானத்துக்கு  சென்னையில் பாராட்டு விழா நடந்தது. அதில் ரஜினிகாந்த் பங்கேற்றார்.

அப்போது கலைஞானம் வாடகை வீட்டில் வசிப்பதுபற்றி மேடையில்  பேசியவர்கள் குறிப்பிட்டனர்.

 பின்னர் பேசிய ரஜினிகாந்த், என்னை ஹீரோவாக்கிய கலைஞானத்துக்கு நானே வீடு வாங்கி பரிசளிப்பேன் என்று  அறிவித்தார். அதன்படி விருகம்பாக்கம் பகுதியில் 3 படுக்கை அறை வசதியுடன் 1320 சதுரஅடி பரப்பளவில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள வீடு  ஒன்றை வாங்கி கலைஞானத்துக்கு அளித்தார். அதில் கலைஞானம் குடும்பத்தினருடன் நேற்று குடியேறினார்.

அவரது வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்த்,  குத்துவிளக்கு ஏற்றி கிரகப்பிரவேசத்தை தொடங்கி வைத்தார்.

.

மூலக்கதை