வர்த்தக மோதலால் இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு கிரெடிட் சுயிஸ் நிறுவன கருத்துக்கணிப்பில் தகவல்

தினமலர்  தினமலர்
வர்த்தக மோதலால் இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு கிரெடிட் சுயிஸ் நிறுவன கருத்துக்கணிப்பில் தகவல்

புது­டில்லி:அமெ­ரிக்கா மற்­றும் சீனா ஆகிய நாடு­க­ளுக்கு இடை­யே­யான வர்த்­தக மோதல் கார­ண­மாக, சீன ஏற்­று­ம­தி­யில் பெரும்­ப­கு­தியை, இந்­தியா வெல்ல முடி­யும் என, ’கிரெ­டிட் சுயிஸ்’ நிறு­வ­னம் கூறி­யுள்­ளது.


’அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யே­யான வர்த்­தக மோத­லில் பய­ன­டை­யும் நாடு­களில், இந்­தியா முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கும்.வர்த்­தக மோதல் கார­ண­மாக, 35,000 முதல் -55,000 ஆயி­ரம் கோடி டாலர் மதிப்­பி­லான ஏற்­று­மதி, சீனாவை விட்டு வெளி­யே­றும்.இதில் பெரும்­ப­கு­தியை, இந்­தி­யா­வால் கைப்­பற்ற முடி­யும்’ என, சுவிட்­சர்­லாந்தை சேர்ந்த, பன்­னாட்டு முத­லீட்டு வங்கி மற்­றும் நிதி ஆலோ­சனை நிறு­வ­ன­மான, கிரெ­டிட் சுயிஸ்தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­று­வ­னம், உல­கெங்­கி­லும் உள்ள மிகப்­பெ­ரும், 100 நிறு­வ­னங்­களில், இது குறித்து
கருத்­துக்க­ணிப்பை நடத்­தி­யுள்­ளது.அதில், இந்­தி­யா­வுக்கு பிர­கா­ச­மான வாய்ப்பு இருப்­ப­தாக தெரி­ய­வந்­துள்­ளது.இந்­நி­று­வ­னம் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:சீனா­வில் உள்ள
நிறு­வ­னங்­கள், தங்­கள் உற்­பத்­தியை வியட்­நாம், இந்­தியா, தைவான் மற்­றும்
மெக்­ஸி­கோ­வுக்கு மாற்ற திட்­ட­மிட்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.


பல நிறு­வ­னங்­கள், சீனா­வி­லி­ருந்து வெளி­யேறி, வேறு இடங்­களில் உற்­பத்­தியை துவக்க
ஆர்­வ­மாக இருக்­கின்­றன.இதற்கு அவர்­கள் பட்­டி­ய­லி­டும் கார­ணங்­களில் முக்­கி­ய­மான ஒன்று, சுருங்கி வரும் சீன தொழி­லா­ளர்­கள். அந்­நாட்­டின் தொழி­லா­ளர்­க­ளின் எண்­ணிக்கை சுருங்கி வரு­கிறது.

கடந்த, 2015லிருந்து இது­வரை, 2 கோடி தொழி­லா­ளர்­கள் குறைந்­து­விட்­ட­னர். இது மேலும், 90 லட்­சத்­தி­ல் இ­ருந்து, 1.5 கோடி சுருங்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவை தவிர,
அமெ­ரிக்­கா­வின் இறக்­கு­மதி வரி, தேவை குறைவு ஆகி­ய­வை­யும் பாதிப்பை ஏற்­ப­டுத்தி
உள்­ளன.இதன் கார­ண­மாக, அவர்­கள் வியட்­நாம், இந்­தியா, தைவான் போன்ற நாடு­க­ளுக்கு தொழிற்­சா­லை­களை மாற்ற திட்­ட­மி­டு­கின்­ற­னர்.

அமெ­ரிக்­கா­வில், சீனப் பொருட்­க­ளுக்கு இறக்­கு­மதி வரி மேலும் அதி­க­ரிக்­கும் நிலை­யில், பொருட்­க­ளின் விலை­யும் அதி­க­ரிக்­கும்.இப்­போ­து­தான், சீனா­வி­லுள்ள நிறு­வ­னங்­கள் உச்ச நிலை அழுத்­தத்தை உணர்­கின்­றன. கார­ணம், அங்கு முழு­மை­யாக தயா­ரிக்­கப்­பட்ட
பொருட்­களில், 80 சத­வீத பொருட்­கள், அமெ­ரிக்­கா­வின் அதிக இறக்­கு­மதி வரி­யால்
பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

இத­னால், சீனா­வி­லி­ருந்து ஏற்­று­மதி செய்­வ­தற்கு பதி­லாக, பிற இடங்­க­ளுக்கு, சீனா­வி­லுள்ள நிறு­வ­னங்­கள் இடம் பெய­ரும்.இதை­ய­டுத்து, 24.5 லட்­சம் கோடி ரூபா­யி­லி­ருந்து, 38.5 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பி­லான ஏற்­று­மதி, சீனாவை விட்டு வெளி­யே­றும். பிற­ நா­டு­கள் இந்த வாய்ப்பை பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தைப் பொருத்து, இது மேலும் அதி­க­ரிக்­கும். என
கரு­து­கி­றோம்.இவ்­வாறு கருத்­துக்­க­ணிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


அடுத்த சுற்று பேச்சு

அமெ­ரிக்­கா­வும், சீனா­வும் வர்த்­தக மோதல் குறித்த, அடுத்த சுற்று பேச்சை நாளை நடத்த இருப்­ப­தாக, வெள்ளை மாளிகை அறி­வித்­துள்­ளது.கட்­டாய தொழில்­நுட்ப பரி­மாற்­றம்,
அறி­வு­சார் சொத்­து­ரிமை, சேவை­கள், விவ­சா­யம் உள்­ளிட்­டவை குறித்து பேச்சு நடத்­தப்­படும் என தெரி­கிறது. உல­கின், இரண்டு பெரிய பொரு­ளா­தா­ரங்­க­ளுக்கு இடையே அதி­க­ரித்து வரும் மோதல் போக்கு, நிறு­வ­னங்­க­ளின் பங்கு விலை­களை குறைத்து, உல­கப் பொரு­ளா­தா­ரத்­துக்கு அச்­சு­றுத்­த­லாக மாறி வரு­கிறது. இந்­நி­லை­யில், நாளை நடை­பெ­றும் பேச்சு முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தாக கரு­தப்­ப­டு­கிறது.

மூலக்கதை