சர்வதேச டென்னிஸ் போட்டி: ஜோகோவிச்சுக்கு ரூ.2.75 கோடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சர்வதேச டென்னிஸ் போட்டி: ஜோகோவிச்சுக்கு ரூ.2.75 கோடி

டோக்கியோ: ஜப்பான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோக்கியோவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரரான செர்பியாவின் நோவக்  ஜோகோவிச் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜான் மில்மானை (ஆஸ்திரேலியா) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். ஜப்பான்  ஓபனில் அறிமுகமான முதலாவது ஆண்டிலேயே பிரமாதப்படுத்தியுள்ள ஜோகோவிச்சுக்கு ரூ. 2. 75 கோடி பரிசுத்தொகையும், 500 தரவரிசை  புள்ளிகளும் கிடைத்தது.

மொத்தத்தில் இது அவரது 76வது சர்வதேச பட்டமாகும்.

இதேபோல் பீஜிங்கில் நடந்த சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்டியும்  (ஆஸ்திரேலியா), 4ம் நிலை வீராங்கனை நவோமி ஒசாகாவும் (ஜப்பான்) பலப்பரீட்சையில் இறங்கினர். இதில், ஒசாகா 3-6, 6-3, 6-2 என்ற செட்  கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றார்.

இது அவரது 5வது சர்வதேச பட்டம். வாகை சூடிய அவர் ரூ. 10 கோடி பரிசுத்தொகையையும், ஆயிரம்  தரவரிசை புள்ளிகளையும் பெற்றார்.


.

மூலக்கதை