சானியா தங்கை - அசாருதீன் மகன் டிசம்பரில் திருமணம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சானியா தங்கை  அசாருதீன் மகன் டிசம்பரில் திருமணம்

ஐதராபாத்: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் தங்கை அனாம் மிர்சா. இவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  முகமது அசாருதீனின் மகன் ஆசாத்துக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து, சானியா மிர்சா கூறுகையில், “தங்கை அனாம்,  முகமது அசாருதீனின் மகன் ஆசாத்தை 2019 டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்’’ என்றார்.

சானியாவை விட ஏழு வயது இளையவரான அனாம் மிர்சா, கடந்த மாதம் பாரிஸில் தனது பேச்லரேட் விருந்தில், ஆசாத்துடனான புகைப்படங்களை  பகிர்ந்து கொண்டார்.

அதனால், அனாம் மற்றும் ஆசாத்தின் உறவு பற்றிய வதந்திகள் மார்ச் மாதத்தில் வெளியாகின. அதன்தொடர்ச்சியாக இருதரப்பு  பெற்றோர் திருமண பேச்சுவார்த்தையை ெதாடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை