இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு பெண் குழந்தை: வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு பெண் குழந்தை: வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2011ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ரஹானேவை, ‘சின்ன ராகுல் டிராவிட்’ என்று ரசிகர்களால்  அழைக்கப்படுவது வழக்கம். பேட்டிங்கில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் சில காலம் இந்திய அணியில் இடம்பெறமால் இருந்தார்.

கடந்த ஐபிஎல்  போட்டியில் சிறப்பாக விளையாடிய இவருக்கு உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கவில்லை.

 இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் ரஹானேவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான  டெஸ்ட் போட்டியில் ரஹானே விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், ரஹானேவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.   தற்போது குழந்தையுடன் இருக்கும் மனைவியும் தானும் இருக்கும் புகைப்படத்தை ரஹானே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதனை பலரும் பகிர்ந்து,  குழந்தைக்கும் ரஹானே தம்பதிக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

மேலும், ரஹானேவின் இந்த பதிவிற்கு கமெண்ட் இன் மூலம் தொடர்ந்து வாழ்த்து  தெரிவித்து வருவதோடு அவரின் அந்த புகைப்படத்தை அதிக அளவு இணையத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.

.

மூலக்கதை