இந்தியா - தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட்: ஒரே டெஸ்டில் இத்தனை சாதனையா?..ரோகித் ஷர்மா அபாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியா  தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட்: ஒரே டெஸ்டில் இத்தனை சாதனையா?..ரோகித் ஷர்மா அபாரம்

விசாகப்பட்டினம்: இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

அணியில் அதிகப்பட்சமாக மயங்க் அகர்வால் 215 (371), ரோகித் ஷர்மா 176 (244) ரன்கள் குவித்தனர். தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்பிரிக்கா அணி, நிதானமாக ஆடியும் 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

71 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் குவித்து ஆட்டத்தை டிக்ளர் செய்தது. அணியில் அதிகப்பட்சமாக ரோகித் ஷர்மா 127 (149), புஜாரா 81 (148) ரன்கள் குவித்தார்.

இன்று நடக்கும் போட்டியில், தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 384 ரன்கள் தேவை. இப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்ததன் மூலம் ரோகித் ஷர்மா, பல சாதனைகளை பதிவு செய்துள்ளார்.விசாகப்பட்டினத்தில் 2 சதம் பதிவு செய்ததன் மூலம் ரோகித் சர்மா, டெஸ்டில் சராசரியாக 100 கடந்தார். இதன் மூலம் டான் பிராட்மேனின் சராசரியான 98. 22-ஐ முறியடித்தார்.

இப்போது இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்களும். 6 அரைசதங்களும் அடித்துள்ளார், விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில், 13 சிக்ஸர்களை அடித்தார்.

ஒரு டெஸ்ட் போட்டியில் வசீம் அகராமின் 12 சிக்ஸர்கள் என்ற நீண்டகால சாதனையை ரோஹித் முறியடித்தார். அக்ரம் 1996ல் ஜிம்பாப்வேக்கு எதிராக 12 சிக்ஸர்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

ஒரு தொடக்க வீரராக இரு இன்னிங்ஸ்களிலும் சதம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடக்க வீரராக தனது முதல் வெளியேற்றத்தில் இரு இன்னிங்ஸ்களிலும் சதங்களை அடித்த ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். மேற்கண்ட 2 இன்னிங்ஸ்களிலும் ரோகித் சர்மா ஸ்டம்பிங் ஆனார்.

இதன் மூலம்  இன்னிங்ஸ்களிலும் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்த ஒரே இந்திய பேட்ஸ்மேன் என்ற பெயர் பெற்றார்.

.

மூலக்கதை