ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ஜாமீன் கேட்டு, உச்சநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு முறைகேடாக அனுமதி அளித்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்து, திகார் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையும் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்தநிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்ப நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இன்று உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதி ரமணா பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த மனு மீதான விசாரணையை யார் எடுத்துக் கொள்வது என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று கூறினார்.

இதனால் தலைமை நீதிபதி முடிவுக்குப் பிறகு சிதம்பரம் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெறும்.

.

மூலக்கதை