தேர்தலுக்கு ஆயத்தமாகும் இலங்கை: ஏப்ரலில் நாடாளுமன்றம் கலைப்பு

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
தேர்தலுக்கு ஆயத்தமாகும் இலங்கை: ஏப்ரலில் நாடாளுமன்றம் கலைப்பு

பொதுத் தேர்தலுக்கு தயாராகுமாறு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தங்களது கட்சித் தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளனர். பொதுத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 23 ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மார்ச் மாதம் முதல் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.மேலும் பொதுத் தேர்தலுக்கு உடனடியாக ஆயத்தமாகுமாறு அதிபர் மைத்திரிபால சிறிசேன இலங்கை சுதந்திரக் கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சுதந்திரக் கட்சியின் பிராந்திய அலுவலகங்கள் , இணைப்பு அலுவலகங்களின் உறுப்பினர்களை அழைத்து கட்சியினை பலப்படுத்துமாறு அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.இனி வரக்கூடிய நாடாளுமன்றத்தில் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்கமொன்றை உருவாக்க உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்து நல்லாட்சிக்கும், அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பலமாக இருக்கும் வகையில் அரசு அமைக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை