ஜனாதிபதிக்கு பிறந்த நாள்: பிரதமர் உட்பட தலைவர்கள் வாழ்த்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜனாதிபதிக்கு பிறந்த நாள்: பிரதமர் உட்பட தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், ஜனாதிபதியின் பிறந்தநாளில் அவருக்கு எனது வாழ்த்துக்கள். கொள்கை விஷயங்களைப் பற்றிய அவரது நுண்ணறிவு மற்றும் புரிதலிலிருந்து இந்தியா பெரிதும் பயனடைந்திருக்கிறது.

ஏழைகளையும் நலிவுற்றோரையும் மேம்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

அவர் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல ஆண்டவன் ஆசீர்வதிக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த 1945ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்த ராம்நாத் கோவிந்த், நாட்டின் 14வது ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.

2017ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி ஜனாதிபதியாக பதவியேற்றார். முன்னதாக, 2015 முதல் 2017 வரை பீகார் மாநில கவர்னராக பதவி வகித்தார்.

1994 முதல் 2006 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை