இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்: நாளை விசாகபட்டினத்தில் தொடக்கம்...வீரர்கள் பட்டியல் வெளியீடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியா  தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்: நாளை விசாகபட்டினத்தில் தொடக்கம்...வீரர்கள் பட்டியல் வெளியீடு

விசாகபட்டினம்: இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது.

தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் டாக்டர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நாளை காலை 9. 30 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணிகளும் மொத்தம் 36 டெஸ்ட் ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில், தென்னாப்பிரிக்கா 15 போட்டியிலும், இந்தியா 11 போட்டியிலும் வென்றுள்ளன.

10 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. நாளை முதல் 6ம் ேததி வரை விசாகப்பட்டினத்தில் முதல் டெஸ்டும், 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை புனேயில் இரண்டாவது டெஸ்டும், 19ம் தேதி  முதல் 23ம் தேதி வரை ராஞ்சியில் மூன்றாவது டெஸ்டும் நடைபெறுகின்றன.

இந்திய அணியில், விராட் கோஹ்லி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், சேதஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரித்திமான் சாஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சா்மா, ஷுப்மன் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேேபால், தென்னாப்பிரிக்கா அணியில், டூ பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), டெம்பா பவுமா (துணை கேப்டன்), டி பியுரன், குவின்டன் டி காக், டீன் எல்கர், ஜுபோ ஹம்சா, கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், செனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, நார்ட்ஜே, வொனான் பிலாண்டர், டேன் பெய்டிட், காகிஸோ ரபாடா, ஹென்ரிஸ் கிளாஸன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

.

மூலக்கதை