மதத்தின் பெயரால் பாகுபாடு கூடாது: மோடி

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
மதத்தின் பெயரால் பாகுபாடு கூடாது: மோடி

மதத்தின் பெயரால் பாகுபாடு காட்டப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அவர்,இந்தியா தான் தனது அரசின் மதம் எனக்கூறினார். அரசியலமைப்பே பாரதிய ஜனதா அரசின் புனித நூல் என்றும், அனைவருக்கும் நலன் என்பதே தங்களது வழிபாடு என்றும் அவர் பேசினார். மதத்தின் பெயரால் இழிவான கருத்துகள் வெளிவருவதை தடுக்க வேண்டியது பிரதமராகிய தனது கடமை என்றும் மோடி குறிப்பிட்டார். மதத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்ட யாருக்கும் அனுமதி கிடையாது என்றும் பிரதமர் கூறியுள்ளார். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாகத்தான் திகழ்கிறது என்றும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே நாட்டை முன்னெடுத்துச் செல்ல தான் விரும்புவதாகவும் மோடி தெரிவித்தார். தனது உரையில் காங்கிரஸை கடுமையாகச் சாடிய மோடி, நாட்டை 60 ஆண்டுகள் ஆண்ட அந்தக்கட்சி வறுமையை ஒழிக்கத் தவறிவிட்டதாக விமர்சித்தார். தேவைப்பட்டால் நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் திருத்தங்கள் செய்ய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.

மூலக்கதை