நீதிமன்றம் விடுவித்த நிலையில் சத்தியமா சொல்றேன்... நான் தப்பு செய்யல... மேட்ச் பிக்சிங்கில் சிக்கிய ஸ்ரீசாந்த் குமுறல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நீதிமன்றம் விடுவித்த நிலையில் சத்தியமா சொல்றேன்... நான் தப்பு செய்யல... மேட்ச் பிக்சிங்கில் சிக்கிய ஸ்ரீசாந்த் குமுறல்

திருவனந்தபுரம்: கடந்த 2007ம் ஆண்டு டி20 உலககோப்பை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தவர் வேகப்பந்து வீச்சாளர் சாந்த் (36). இவர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறி பிசிசிஐ இவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.

இதை எதிர்த்து அவர் கோர்ட்டில் முறையிட்டார். கோர்ட் அவரை விடுவித்தது.

ஆனாலும் அவரால் இன்று வரை கிரிக்கெட் விளையாட முடியவில்லை. இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறியதாவது: எனது குழந்தை, கடந்த 5 வருடமாக நோயால் உயிருக்கு போராடிக் கொண்டிக்கும் எனது தந்தை, ஒரு கால் இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் எனது தாய் ஆகியவர் மீது சத்தியமாக சொல்கிறேன், நான் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை.



அவர்கள் என்னுடைய போட்டியை மீண்டும் பார்க்கும் நம்பிக்கையை இழக்கவில்லை. 100 கோடி ரூபாய் தந்தால் கூட மேட்ச் பிக்சிங் தவறை செய்யமாட்டேன்.

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட வீரர்கள் சிலர், சிரித்த முகத்துடன் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நான் மீண்டும் கிரிக்கெட் வாழ்க்கைக்கு திரும்ப எனக்கு 7 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது.

சில வீரர்கள் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் ஓய்வு பெற்று விட்டார்கள்.

நம் நாட்டு வீரர்கள் மட்டுமல்ல. உலகளவில் விளையாடுகிறார்கள்.

நான் இந்த பிரச்னையை கடந்து வந்த அளவிற்கு அவர்கள் வலிமையானவர்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் எல்லோரும் குற்றவாளிகள்தான்.

ஆனால், அவர்கள் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


.

மூலக்கதை