பும்ராவின் பந்துவீசும் ஸ்டைல் முதுகு வலிக்கு காரணமல்ல... ஆஷிஸ் நெஹ்ரா கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
பும்ராவின் பந்துவீசும் ஸ்டைல் முதுகு வலிக்கு காரணமல்ல... ஆஷிஸ் நெஹ்ரா கருத்து

மும்பை: இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, தன்னுடைய நேர்த்தியான பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். உலகக் கோப்பை தொடரிலும் அவர் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.

இருப்பினும், முதுகுவலி காரணமாக தென்னாப்ரிக்கா மற்றும் வங்கதேசம் தொடரில் இடம்பெறவில்லை. தற்போது, இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்குமாறு அவருக்கு மருத்துவர்கள் அறியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், பும்ரா ஏற்பட்டுள்ள முதுகு வலி குறித்து முன்னாள் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா பேசியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘அவருக்கு ஏற்பட்டுள்ள வலிக்கும், அவரது பந்துவீசும் முறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதனை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

அவரது பந்துவீசும் ஸ்டைலை மாற்றிக்கொள்ளக் கூடாது. அப்படி மாற்றினால், சிறப்பாக பந்துவீச முடியாது.

அவர் திரும்பி வந்தவுடன், பழையபடியே பந்துவீசுவார். அவரது வலி குறைய இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும்.

மேற்கொண்டு சில மாதங்கள் கூட ஆகலாம்’’ என்றார்.


.

மூலக்கதை