இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்களையும், அவர்களது மூன்று படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்களையும், அவர்களது மூன்று படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்களையும், அவர்களது மூன்று படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் கைது நடவடிக்கை தொடர்வதாக குறிப்பி்ட்டிருக்கிறார். கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா இன்று தொடங்கும் நிலையில், மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது என முதலமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் கடல் மீன்பிடித் தொழிலை நம்பி 10 லட்சம் மீனவர்கள் இருப்பதாக பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். நீண்டகாலமாக இலங்கை பிடித்து வைத்துள்ள 81 படகுகள் எப்போது விடுவிக்கப்படும் என தமிழக மீனவர்கள் எதிர்நோக்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக நிலவி வரும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண இரண்டு வழிகள் இருப்பதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார். முதலில் கடலின் ஆழத்தை பராமரிக்க ஆயிரத்து 250 கோடி ரூபாய் நிதியுதவியும், அடுத்தபடியாக இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுப்பதும் தான் வழிமுறைகளாகும் என பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மூலக்கதை