தனிநாயகம் அடிகளாருக்கு நினைவு தின விழா!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தனிநாயகம் அடிகளாருக்கு நினைவு தின விழா!

தமிழுக்குத் தகை சேர்த்த தவத்திரு தனிநாயக அடிகளாரின் நினைவு விழாவினை இன்று மாலை சிறப்பாக்க் கொண்டாடினர் சிங்கப்பூர் திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தினர். இளைஞன் ரோஷன் பரத் இனிய தமிழ் வாழ்த்துடன் தொடங்கிய. நிகழ்ச்சியில் உமா தேவி சாந்தகுமாரும், பிரபஞச குடில் நடனக் குழுவினரும் பல்சுவை நடன்ங்கள் அளித்தனர்.

நிகழ்ச்சித் தலைவர் திரு.தமிழ்மறையான் தன் வரவேற்புரையில் அன்றைய தமிழ் முன்னோடிகளையும், தமிழ் வளர்த்த அன்றைய அமைப்புகளையும் நினைவு படுத்தினார். சிறப்பு விருந்தினர் தமிழர் பேரவை தலைவர் வே.பாண்டியன், வள்ளுவச் சிறப்புகளையும், அதன் வழி நின்று தமிழ் வளர்த்த தனிநாயகம் அடிகளாரின் பங்கு பற்றியும் குறிப்பிட்டார்..செல்வி மோனாலிசா, அடிகளாரின் வாழ்க்கைக் குறிப்புகளையும், தமிழ்ப் பணிகளையும் தெளிவாகக் கூறினார்.

சிறப்புப் பேச்சாளர் முனைவர் இரத்தின வேங்கடேசன், தனிநாயக அடிகளார் பேசிய பேச்சுகளிலிருந்தும்,, அவர் கையாண்ட தமிழ்க் குறிப்புகளிலிருந்தும் கருத்தறிந்து கூறியது சுவையாக அமைந்த்து. அகநானூற்றுக் காதல் கதை, சங்க காலப் புலவனின் புலமைத்தனம்,தமிழின் தொன்மையை உணர்த்த அடிகளார் கையாண்ட வழிகள் என பல தகவல்களை முனைவர் அழகுற சேகரித்துத் தந்தார். தனிநாயக அடிகளார் உலகப் புகழ் திருக்குறளை எடுத்தாண்ட விதம் தமிழுக்கு அவர் செய்த சிறப்பு .எனக் கூறிய அவர், கிறிஸ்துவராக இருந்தாலும், தமிழுக்கு அடிமையானவர் அடிகளார், சங்க கால நூல்களில் திளைத்தார். சங்க இலக்கியங்கள் தமிழ் உணர்விற்கும், தமிழ் வாழ்விற்கும் வழி காட்டியவை என்றார். இலக்கண நூலான தொல்காப்பியத்தின் புதைந்து கிடக்கும் வாழ்வியல் தத்துவங்களை மக்களுக்கு விளக்கினார். நெல்லிக்காய் மூட்டைகளாக இருக்கும் தமிழ் மக்கள், ஒன்றிணைந்து வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார் – என மன நிறைவான உரையை முனைவர் இரத்தின வேங்கடேசன் முடித்தார். --ஏபிஆர்.

மூலக்கதை