செய்திச்சுருக்கம் (ஆகஸ்ட் மாதம், 2019) -தொகுப்பு: இளவழுதி வீரராசு

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

தமிழகத்தைச் சேர்ந்த திரு டி ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். இந்த பதவியில் அமர்ந்த முதல் தமிழர் திரு டி .ராஜா. நிலத்தடி நீரை மிக அதிகமாக உறிஞ்சி எடுப்பதில் இந்தியாவில் தமிழ்நாடு முதல்இடம். தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் முதல் இடம். மொத்தம் 3159 புலிகள் தான் உலகில் உள்ளன அவற்றில் இந்தியாவில் 2977 புலிகள் உள்ளன. தமிழகத்தில் 264 புலிகள் உள்ளன. காஃபி டே உரிமையாளர் சித்தார்த் சொத்து மதிப்பு ரூ24000 கோடிகள். கடன் 8000 கோடி மட்டுமே. நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டதை 2 ஆண்டுகளாக தெரிவிக்காதது ஏன்? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி நளினி பிரசிகா, திண்டுக்கல். தமிழ்நாட்டில் கல்லூரியில் (லயோலா கல்லூரி) சேர்ந்து பட்டம் பெற்றுள்ள முதலாவது திருநங்கை. ஒழுங்கு நடவடிக்கை பாரத ஸ்டேட் வங்கிக்கு 7 கோடி அபராதம் விதித்தது கருவூல வங்கி இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா நாடுகளில் தமிழக முதல்வர் பழனிச்சாமி 14 நாள் சுற்றுப்பயணம்.  10 ஆண்டுகளில் முதன்முறையாக லண்டனில் மின்தடை. 46000 தமிழ்ப்பெயர்கள் புத்தகத்தை, 100 படிகள் வாங்கி இருக்கின்றேன். நீங்களும் வாங்குங்கள். திருமணங்களில் பூங்கொத்துக்கு பதில் இந்நூலை வாங்கி பரிசாகக் கொடுங்கள். - வைகோ தொழிற்சங்கம் மற்றும் அரசியல் தலையீடுகளால் போக்குவரத்துக் கழகங்களை பொதுஉடைமை ஆக்கியதன் நோக்கம் சீர்குலைந்து விட்டது. சென்னை உநீம. உடல் உறுப்புக்கொடையில் 2015, 2016, 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் இந்திய அளவில் தமிழகம் முதல் இடம். கார்பன் மாசுவை குறைக்க வலியுறுத்தி சோலார் ஆட்டோவில் உலகை வலம் வரும் ஆஸ்திரேலியா மாணவர்கள் சென்னை வந்தடைந்தனர். ஃபிரான்ஸ் நாட்டின் கிளாரமோண்ட் பெரான்ட் நகர அமைப்பில் சென்னையை சீரமைக்க ஒப்பந்தம் கையெழுத்து. பிரிசில்லா பாண்டியன். சென்னை வழக்குரைஞர் மன்ற பொறுப்புக் குழுவுக்குத் தேர்வு பெற்றுள்ள முதல் பெண். தமிழகத்தின் 13 ஆவது சட்டக்கல்லூரி நாமக்கல்லில் தொடங்கப்பட்டது. அமேசன் காட்டில் பற்றி எரியும் தீ. “உலகின் நுரையீரல் எரிகின்றது” என பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரன் கருத்து நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடுவண் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளை தமிழகத்தில் அமைக்கப்படும். லண்டனில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்பந்தம். தமிழில் புதிய சொற்களை உருவாக்கும் மாணவர்களுக்கு விருதுகள்.  அமைச்சர் பாண்டியராசன் தகவல். உலக சாம்பியன்ஷிப்  பேட்மிண்டன் போட்டியில் ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி பட்டம் வென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார் பி வி சிந்து தமிழக அரசு இடமான  சேப்பாக்கம் கிரிக்கெட் திடக்கு 1970 முதல் கிரிக்கெட் சங்கம் தர வேண்டிய குத்தகை பாக்கி  2081 கோடி.

100 புதிய விளையாட்டு அரங்கங்கள் கட்டப்படும். அமைச்சர் செங்கோட்டையன்.                                                                  

மூலக்கதை