திரு.வி.கல்யாண சுந்தரனாரின் 136-வது பிறந்தநாள் அவர் பிறந்த ஊரில் கொண்டாடப்பட்டது.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
திரு.வி.கல்யாண சுந்தரனாரின் 136வது பிறந்தநாள் அவர் பிறந்த ஊரில் கொண்டாடப்பட்டது.

போரூர் இராமச்சந்திரா மருத்துவ மனை அருகில் உள்ள செட்டியார் அகரம் தண்டலம் என்னும் துள்ளம் சிற்றூரில் திரு.வி.க பிறந்த இல்லத்தில் உள்ள நூலகத்தில்  26.08.2019 காலை 8மணி அளவில் கொண்டாடப் பெற்றது.

தமிழ் அமைச்சர் மாண்பு மிகு பாண்டியராசன், உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன்,  அரசு அதிகாரிகள், தமிழ் எழுச்சிப் பேரவை, தலைவர், வரலாற்றறிஞர் தஞ்சை கோ. கண்ணன், செயலர் முனைவர் இறையரசன், மறைமலை அடிகள் அறக்கட்டளை நிறுவனர் மறை. தி. தாயுமானவன், துள்ளம் திரு.வி.க இயக்கச், செயலர் இரவிச்சந்திரன், திரு.வி.க அன்பர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. 

மறைமலை அடிகள் விருது அறிவித்துள்ளதற்கும், ஆண்டுதோறும் மறைமலை அடிகள் திரு.வி.க பிறந்த நாள் விழாக்கள் அரசு சார்பில் நடத்தப்பெறும் என்று முன் வந்து நடத்துவதற்கும் நன்றி தெரிவித்ததுடன், திரு.வி.க. நுழைவாயில் வளைவு போரூர் நெடுஞ்சாலையில் அமைக்கவேண்டும் என்றும் தமிழ் எழுச்சிப் பேரவை, திரு.வி.க பேரவை ஆகியவற்றின் சார்பில் கோரிக்கை வைக்கப்பெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்பு மிகு பாண்டியராசன், ஆர்வத்துடன் உடனடியாக திரு.வி.க வளைவு அமைக்கப்பெறவேண்டிய இடத்தைப் பார்வையிட்டதுடன் முதலமைச்சரிடம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

மூலக்கதை