தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள மின்சாரப் பேருந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள மின்சாரப் பேருந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் முதல்முறையாகச்  சோதனை அடிப்படையில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை இன்று சென்னையில் துவங்கப்பட்டுள்ளது.  FAME INDIA - 2 திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 65 நகரங்களில் 5595 மின்சாரப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் 595 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன.

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மயிலாப்பூர், அடையாறு வழியாகத் திருவான்மியூர் வரை காலை இரண்டு முறையும் மாலை இரண்டு முறையும் இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. 32 இருக்கைகளைக் கொண்ட இந்தப் பேருந்துகள் முழுமையாகக் குளிர்சாதன வசதியும் தானியங்கிக் கதவுகளும் கொண்டவை. ஜி.பி.எஸ். வசதியும் இந்தப் பேருந்தில் உண்டு.  மூன்று மாதங்களுக்குச் சோதனை அடிப்படையில் சென்ட்ரல் - திருவான்மியூர் வழித்தடத்தில் இந்த மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்கலத்தில் ஒரு முறை மின்சாரத்தை நிரப்பினால், 40 கி.மீ. பயணம் செய்ய முடியும்.  

மூலக்கதை