10 நாட்களாக தொடர்ந்து உயர்வு: ₹80ஐ தொடுகிறது பெட்ரோல் விலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
10 நாட்களாக தொடர்ந்து உயர்வு: ₹80ஐ தொடுகிறது பெட்ரோல் விலை

சென்னை: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ரூ. 77. 28 ஆகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 11 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ. 71. 09 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்தன.

இந்த நடைமுறையை மாற்றி பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. ஏறி, இறங்கி காணப்படும் பெட்ரோல், டீசல் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

அதன்படி, தலைநகர் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 77. 28 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ. 71. 09ஆகவும் விற்கப்பட்டு வருகின்றன.

இந்த விலை நிர்ணயம் இன்று காலை 6 மணியில் இருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை சிறிதும் குறையாமல் தொடர்ந்து ஏறி வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் விலை ஏற்றத்தின் காரணமாக பெட்ரோல் விலை விரைவில் ரூ. 80ஐ தொடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை