87வது பிறந்த நாளையொட்டி மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
87வது பிறந்த நாளையொட்டி மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை உறுப்பினருமான மன்மோகன் சிங் இன்று தனது 87-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அவருக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்வு அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’ எனக் கூறி உள்ளார்.

.

மூலக்கதை