அக். 2ல் இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: பும்ராவுக்கு பதிலாக உமேஷ் யாதவ்..முதுகு தண்டில் காயத்தால் ஓய்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அக். 2ல் இந்தியா  தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: பும்ராவுக்கு பதிலாக உமேஷ் யாதவ்..முதுகு தண்டில் காயத்தால் ஓய்வு

மும்பை: வரும் அக். 2ம் தேதி தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்தியாவின் டெஸ்ட் அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் நியமிக்கப்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

முதுகு தண்டில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக பும்ரா தென்னாப்பிரிக்காவுக்கு டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். உமேஷ் யாதவ் கடைசியாக 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றார்.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக விளையாடிய நிலையில், தற்போது அவர் ஓய்வில் உள்ளதால் இந்தியா அணிக்கு இந்த செய்தி பெரும் பின்னடைவாக உள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா, ஹாட்ரிக்குடன் சேர்த்து 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணியில் இருந்து விலகியிருந்த உமேஷ் யாதவ், டெஸ்ட் அணியில் வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ஷமி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோருடன் இணைவார்.

தென்னாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது. மற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் புனே மற்றும் ராஞ்சியில் நடக்கவுள்ளது.

மேற்கண்ட 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில், விராட் கோஹ்லி (கேப்டன்), மயங்க் அகர்வால், ரோஹித் ஷர்மா, சேடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின் , ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

.

மூலக்கதை